அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமனம் முதல்வர் - துணை முதல்வர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      தமிழகம்
ops eps a 14-09-2018

சென்னை,அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:- அ.தி.மு.க. சட்ட ஆலோசகராக தமிழக சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றத்தின் இணை செயலாளராக முன்னாள் எம்.பியும் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவருமான காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வெளியிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து