முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மை இந்தியா இயக்கத்துக்காக நம்மை அர்ப்பணிப்போம்: பிரதமர் மோடி பேச்சு

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மகாத்மா காந்தியின் கனவான தூய்மையான இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் நான்காவது ஆண்டு தொடக்க விழா, வரும் அக்டோர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு, இரண்டு வார பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்று  தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள், பள்ளிச் சிறார்கள், அரசு அலுவலர்கள், சுயஉதவிக் குழுவினர் என பல்வேறு தரப்பு மக்களுடன் அவர் கலந்துரையாடினார்.

தூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்து செயல்படுமாறு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2,000 பிரபலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் ஆகியோருக்கு பிரதமர் தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதேபோல், பிரபலமான சில ஆன்மிகத் தலைவர்கள், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள், முன்னணி ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கும் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ள தூய்மை இந்தியா திட்டம், நாடு முழுவதும் தூய்மை புரட்சிக்கு வித்திட்டுள்ளது' என்று மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காந்தியின் கனவான தூய்மையான இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இன்று முதல் காந்தி ஜெயந்தி வரை தூய்மை இந்தியா இயக்கத்துக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். தூய்மையான இந்தியா என்ற காந்தியின் கனவு தற்போது நனவாகி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அனைத்து பிரிவுகளில் இருந்தும் மக்களின் பங்களிப்பு உள்ளது என்பது பெருமைக்குரியது என்றும் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து