முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அமைச்சர்களுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோரை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார்.அமெரிக்க அமைச்சர்கள் மைக் போம்பியோவும், ஜேம்ஸ் மேட்டிசும் அண்மையில் டெல்லி வந்தனர். அப்போது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தகவல் பரிமாற்றம், பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதைத் தொடர்ந்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்று அந்த நாட்டு அமைச்சர்கள் மைக் போம்பியோ, ஜேம்ஸ் மேட்டிஸை அவர் சந்தித்துப் பேசினார்.அப்போது பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக சுதந்திரமான கடல்வழி போக்குவரத்தை உறுதி செய்வது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து