முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா மாணவி பலாத்கார சம்பவம் குற்றவாளிகள் புகைப்படம் வெளியீடு நீதிதான் எனக்கு தேவை என பெண்ணின் தாய் ஆவேசம்

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அரியானாவில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்க அதிகாரிகள் சென்ற போது, அதனை ஏற்க அவரின் தாய் மறுத்து எனக்கு தேவை நிதி அல்ல, நீதிதான் என ஆவேசமாக கூறினார். இதனிடையே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் புகைப்படங்களை அம்மாநில போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அரியானா மாநிலம் கைரனாவில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஜனாதிபதி பதக்கம் பெற்ற மாணவி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து பெற்றோர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மணிஷ், நிஷூ மற்றும் பங்கஞ் மூன்று பேரின் புகைப்படத்தை அம்மாநில காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் பங்கஞ் என்பவர் ராணுவ வீரர். அவரை கைது செய்ய ராணுவத்தின் அனுமதியை போலீஸார் கோரியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு அரியானா மாநில அரசு நிதியுதவி அறிவித்தது.ஆனால் இந்த நிதியுதவியை பெற மாணவியின் தாய் மறுத்து விட்டார். எனக்கு தேவை நிதி அல்ல, நீதிதான் என ஆவேசமாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து