முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மான் வேட்டை வழக்கு: தபு, சோனாலி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அப்பீல்

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      சினிமா
Image Unavailable

புதுடெல்லி, மான் வேட்டை வழக்கில் ஹிந்தி நடிகர், நடிகைகளான சோனாலி பிந்த்ரே, நீலம் கோத்தாரி, தபு, சைஃப் அலி கான் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அந்த மாநில அரசு  தெரிவித்தது.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூருக்கு கடந்த 1998-ஆம் ஆண்டு படப்பிடிப்புக்குச் சென்றபோது அரிய வகை இனத்தைச் சேர்ந்த 2 மான்களை வேட்டையாடியதாக, ஹிந்தி நடிகர்கள் சல்மான் கான், சோனாலி பிந்த்ரே, நீலம் கோத்தாரி, தபு, சைஃப் அலிகான் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜோத்பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. எனினும், சோனாலி பிந்த்ரே, நீலம், கோத்தாரி, தபு, சைஃப் அலிகான் மற்றும் ஜோத்பூரைச் சேர்ந்த துஷ்யந்த் சிங் ஆகியோருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவர்களை நீதிமன்றம் விடுவித்தது.

இந்த தீர்ப்பு வெளியாகி 5 மாதங்களைக் கடந்து விட்ட நிலையில், சோனாலி உள்ளிட்டோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து