முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் 650 தனிநபர் கழிப்பறைகள் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் பயனாளிகளிடம் ஒப்படைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய இயற்கை எண்ணை எரிவாயு கழகத்தின் சார்பில் 650 தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
     ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், வித்தானூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் வீரராகவராவ் கலந்துகொண்டு தூய்மையே சேவை திட்டப்பணிகளைத் துவக்கி வைத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சமூக வளர்ச்சி பொறுப்பு நிதியிலிருந்து முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 650 தனிநபர் இல்லக் கழிப்பறைகளை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்கு அடையாளமாக சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-  மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து, சுற்றுப்புற தூய்மையினை மேம்படுத்திடும் நோக்கில் திறந்த வெளியில் மலம் பழக்கத்தினை முழுமையாக ஒழித்திடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  குறிப்பாக, தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுவதற்கு உதவித்தொகையாக ரூ.12ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் மத்திய அரசு 15.09.2018 முதல் 02.10.2018 வரையிலான நாட்களில் தூய்மையே சேவை என்பதை அடிப்படையாக கொண்டு பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகளிலும் மேற்குறிப்பிட்ட நாட்களில் தூய்மைப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
 மேலும், நமது மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி பொறுப்பு நிதியிலிருந்து ரூ.4.72 கோடி மதிப்பில் சுலப் இன்டர்நேசனல் என்ற தனியார் சேவை நிறுவனம் மூலமாக 1,350 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 17 ஊராட்சிகளிலிருந்து  மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்போடு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  அவற்றில் முதற்கட்டமாக 650 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு இன்றைய தினம்  சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒப்படைப்பதற்கு அடையாளமாக அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
 பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்த்து, கட்டாயம் கழிப்பறைகளை பயன்படுத்திட வேண்டும்.  அதேபோல திடக்கழிவு திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கழிவுகளை மேலாண்மை செய்திட வேண்டும்.  ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்;த்திட வேண்டும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கலெக்டர் தலைமையில் தூய்மையே சேவை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன்பின்பு, கலெக்டர் வித்தானூர் கிராம பொதுமக்களுடன் இணைந்து சுற்றுப்புற தூய்மைப் பணிகளை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்;ச்சி முகமை திட்ட இயக்குநர் த.ஹெட்சி லீமா அமாலினி, ஓ.என்.ஜி.சி. குரூப் ஜெனரல் மேனேஜர்  பிரதீப்தா மிஸ்ரா, மனிதவள பொதுமேலாளர் என்.மணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, சுலப் இன்டர்நேசனல் சேவை நிறுவனம் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீவித்யா கணபதி உள்பட அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து