முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு” 50-வது ஆண்டு பொன்விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்- வரலாற்றுச் சிறப்பு மிக்க நமது மாநிலம், தமிழ்நாடு என்ற பெயரோடு இணைக்கப்பட்டு, ஐம்பதாண்டுகள் ஆனதை ஒட்டி தமிழ்நாடு பொன்விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு,   பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 36 மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர்   பரிசுத்தொகைகளையும், பாராட்டு சான்றிதழ்களையும்  வழங்கினார் 
   தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடைபெற்ற 100மீ ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர்கள் வி.அருண்ஜீனை ராஜா, கே.பத்மாவதி, டி.கார்த்திகேயன், ஏ.அகிலா, பி.தங்கபாண்டியன் மற்றும் ஜி.திவ்யபானு ஆகியோருக்கு தலா ரூ.2,500 - பரிசு தொகைக்கான காசோலைகள் மற்றும்; பாராட்டு சான்றிதழ்களையும், இரண்டாம் இடம் பிடித்த மாணவ, மாணவியர்கள்  வி.முத்துகிருஷ்ணன், இரா.விஷ்ணு பிரியா, எம்.கணேஷ்குமார், எம்.மாலையம்மாள், கே.பாண்டியராஜ், மற்றும் கே.விஜயசாரதி ஆகியோருக்கு தலா ரூ.1,500 - பரிசு தொகைக்கான காசோலைகள் மற்றும்; பாராட்டு சான்றிதழ்களையும், மூன்றாம் இடம் பிடித்த மாணவ, மாணவியர்கள் கே.ரகுராமன், கே.பாலநந்தினி, வி.மோகன்ராஜ், எம்.பாண்டி செல்வி, எஸ்.அசோக்குமார் மற்றும் எஸ்.சுகப்பிரியா ஆகியோருக்கு தலா ரூ.1000 - பரிசு தொகைக்கான காசோலைகள் மற்றும்; பாராட்டு சான்றிதழ்களையும்
 கலை பண்பாட்டுத்துறை சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற நாட்டுப்புற நடனம், தமிழிசை வாய்ப்பாட்டு மற்றும் பரத நாட்டியம் ஆகிய போட்டிகளில் முதலிடம் பிடித்த கே.அழகேஸ்வரன், பெ.சிவக்குமார், மற்றும் எல்.துர்காதேவி ஆகியோருக்கு தலா ரூ.5,000 - வீதம் பரிசு தொகைக்கான காசோலைகள் மற்றும்; பாராட்டு சான்றிதழ்களையும், இரண்டாம் இடம் பிடித்த மாணவ, மாணவியர்கள் எஸ்.சிரஞ்சீவி, பா.பாலமுருகன் மற்றும் எம்.இந்திரா ஆகியோருக்கு தலா ரூ.3,000 - பரிசு தொகைக்கான காசோலைகள் மற்றும்; பாராட்டு சான்றிதழ்களையும், மூன்றாம் இடம் பிடித்த மாணவ மாணவியர்கள் எம்.மல்லிகா பேபி, இரா.பாலாஜி மற்றும் ஜி.விஜயபிரவினா ஆகியோருக்கு தலா ரூ.2,000 - பரிசு தொகைக்கான காசோலைகள் மற்றும்; பாராட்டு சான்றிதழ்களையும்,
 தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர்கள் ச.மோனிஷா, பா.லோகேஷ்வரி மற்றும் மு.கணேஷ் ஆகியோருக்கு தலா ரூ.5,000 - பரிசு தொகைக்கான காசோலைகள் மற்றும்; பாராட்டு சான்றிதழ்களையும், இரண்டாம் இடம் பிடித்த மாணவ, மாணவியர்கள் கா.கண்ணன், க.பாண்டித்துரை மற்றும் இரா.தேவதர்ஷினி ஆகியோருக்கு தலா ரூ.3,000 - பரிசு தொகைக்கான காசோலைகள் மற்றும்; பாராட்டு சான்றிதழ்களையும், மூன்றாம் இடம் பிடித்த மாணவ, மாணவியர்கள்  சு.தமிழ்மணி, இரா.அகிலா மற்றும் க.தங்ககௌசல்யா ஆகியோருக்கு தலா ரூ.2000 பரிசு தொகைக்கான காசோலைகள் மற்றும்; பாராட்டு சான்றிதழ்களையும் என மொத்தம் 36 பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.90,000 - க்கான பரிசுத்தொகைக்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.அ.சிவஞானம்  வழங்கி பாராட்டினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து