முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா தனது முதல் போட்டியில் ஹாங்காங்குடன் இன்று மோதல்

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இன்று தனது முதல் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஹாங் காங்கை எதிர்கொள்கிறது.

பாக். வெற்றி...

இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இலங்கை அணி வங்காள தேசத்திடம் 137 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. 2-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங் காங்கை வீழ்த்தியது.

வெற்றிபெற...

3-வது ‘லீக்’ ஆட்டம் அபுதாபியில் நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இலங்கை அணிக்கு இருந்தது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்திடம் தோற்றதால் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் அது உள்ளது.

4-வது ‘லீக்’

ஆசிய கோப்பை போட்டியின் 4-வது ‘லீக்’ ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் மோதுகின்றன. கேப்டன் விராட் கோலிக்கு ஆசிய கோப்பையில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் 3 ஒருநாள் தொடரை கைப்பற்றி இருக்கிறார். இதனால் இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற முடியும் என்ற நம்பிக்கையோடு உள்ளது.

அதிக வாய்ப்பு

கத்துக் குட்டியான ஹாங் காங்கை இந்திய அணி எளிதில் வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி இடத்தில் இடம் பெற போவது யார்? என்ற ஆர்வத்துடன் எதிரநோக்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் அம்பதி ராயுடு கோலியின் இடமான 3-வது வரிசையில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து