முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்ட முதன்மை நீதிபதி செந்தில் குமரேசன் முன்னிலையில் வட்ட அளவிலான சிறு நிலத் தகராறுகள் தீர்வாயம்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      தேனி
Image Unavailable

  தேனி- தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத்துறை, சட்டப்பணிகள் ஆணையக்குழு மற்றும் காவல் துறை இணைந்து மாவட்டத்தில் முதல் முறையாக வட்ட அளவிலான சிறு நிலத் தகராறுகள் தீர்வாயம்  மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,  தலைமையில், மாவட்ட முதன்மை நீதிபதி  எஸ்.செந்தில் குமரேசன் அவர்கள் முன்னிலையில் தொடங்கியது.
தமிழக அரசு நில நிருவாகத்தில் வெளிப்படையான மற்றும் விரைவான சேவை வழங்கும் பொருட்டு அனைத்து பட்டா மாறுதல் (உட்பிரிவு இடம் பெற்ற இனங்கள், உட்பிரிவு இடம் பெறாத இனங்கள்)இணையம் மூலமாக விண்ணப்பித்து பெறுவதற்;கான ஏற்பாடுகளை கடந்த 16.10.2015-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தினை முறையாக செயல்படுத்தப்பட்டு இன்று வரை 6540  எண்ணிக்கையிலான  உட்பிரிவு இடம்பெறும் இனங்கள்,  17551 எண்ணிக்கையிலான உட்பிரிவு இடம் பெறாத இனங்களுக்கும் பட்டா மாறுதல் ஆணைகள் இணைய வழியாக  வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நில உரிமையாளர்களுக்கு இடையே ஏற்படும் நில தகராறுகள் தொடர்பாக அதிகளவில் மனுக்கள் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகிறது. இம்மனுக்களில் தனித்தனியாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட வட்ட அளவில் தீர்வு செய்வதில் ஏற்படும் காலதாமதங்களை தவிர்ப்பதற்காகவும்  நில உரிமையாளர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை சட்ட ரீதியாக மற்றும் அரசு ஆணைகளின்படி உரியவாறு தீர்வு செய்து விரைவில் ஆணைகள் வழங்கும் பொருட்டும் தேனி மாவட்டத்தில் முதல் முறையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பாக குறு வட்ட அளவிலான நில தகராறுகள் தீர்வாயம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு வாரந்தோறும் செவ்வாய்கிழமை  நடத்தப்படவுள்ளது.
இத்தீர்வாயத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர்; சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்ளவும், அவர்களுடன் நில அளவைத்துறையிலிருந்து  நில அளவர்களும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளும், மாவட்ட இலவச சட்ட ஆலோசனை மன்றத்தின் பிரதிநிதிகளும் தேவையான இடங்களில் காவல்துறையினரும் கலந்து கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தீர்வாயத்தில், நில அளவீடுகள் உள்ள பிரச்சனைகள், பொதுப் பாதை தொடர்பான தகராறுகள், கிராம கணக்கில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளால் உருவான தகராறுகள், பட்டா நிலங்களில் அனுபவத்தில் ஏற்படும் பரப்பளவு பிரச்சனைகள், நீதிமன்றத்தில் நிலஉரிமை தொடர்பாக நிலுவையிலுள்ள இனங்கள் மற்றும் இது போன்ற பிரச்சனைகள் எடுத்துக்கொளள்ப்படும். பொதுமக்கள் வட்ட அளவிலான நிலத்தகராறுகள் தீர்வாயத்தில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.
வட்ட அளவிலான சிறு நிலத் தகராறுகள் தீர்வாயம்  தேனி, தென்கரை, ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய குறு வட்டத்திற்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது.
இந்த தீர்வாயத்தில், மாவட்ட முதன்மை அமர்வு குற்றவியல் நீதிபதி எம்.இளங்கோவன்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், சார்பு நீதிபதி வி.எஸ்.குமரேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) சி.தினேஷ்குமார்,  , வட்டாட்சியர் என்.சத்தியபாமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து