முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு இஸ்ரேல்தான் காரணம்: ரஷ்யா

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

நாகா : சிரியாவில் ரஷ்யாவுக்குச் சொந்தமான விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதிலிருந்த 15 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேல் விமானங்களின் செயல்பாடே காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ரஷ்யப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் இகோர் கொனஷென்கோவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சிரியாவையொட்டிய மத்தியதரைக் கடல் வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த ரஷ்யாவின் இல் - 20 ரக கண்காணிப்பு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், மத்தியதரைக் கடலில் அந்த விமானம் விழுந்து நொறுங்கி, அதில் இருந்த 15 பேரும் உயிரிழந்தனர். சிரியாவில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த இஸ்ரேல் விமானங்களுக்கும், சிரியா வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இடையே சிக்கிக் கொண்ட காரணத்தினாலேயே ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ரஷ்யக் கண்காணிப்பு விமானத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, இஸ்ரேல் விமானங்கள் செயல்பட்டன.

அந்தப் பகுதிகளில் நடவடிக்கை மேற்கொள்வது குறித்த முன்னறிவிப்பை குறித்த நேரத்தில் இஸ்ரேல் விமானங்கள் மேற்கொள்ளவில்லை. தங்களது தாக்குதல் நடவடிக்கை குறித்து ஒரு நிமிடத்துக்கு முன்னர்தான் இஸ்ரேல் விமானங்கள் எச்சரிக்கை விடுத்தன. அதற்குள் அந்தப் பகுதியிலிருந்து விலகிச் செல்ல ரஷ்யக் கண்காணிப்பு விமானத்துக்கு நேரம் இருக்கவில்லை. எனவே, இஸ்ரேல் விமானங்களைக் குறி வைத்த சிரியா ஏவுகணை, தவறுதலாக ரஷ்ய விமானத்தை வீழ்த்தின. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட கடல் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து