முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்களில் பெண்களுக்கு எதிராக செயல்படும் பேஸ்புக்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க் : பேஸ்புக்கில் வரும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் எதுவும் பெண்களுக்கு காட்டப்படுவது இல்லை என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

பேஸ்புக் இந்த வருட தொடக்கத்தில் பயனாளிகளின் தகவல்களை திருடியதாக தகவல் வெளியானது. இது தொடர்பான வழக்கு பல நாடுகளில் இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது பேஸ்புக் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதாவது வேலைவாய்ப்பு சம்பந்தமான விஷயங்களில் பெண்களுக்கு எதிராக பேஸ்புக் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் பொதுவாக யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்து விளம்பரம் கொடுக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு இத்தனை பேருக்கு விளம்பரம் சென்று சேரும் வகையில் விளம்பரம் கொடுக்கலாம். இதற்காக பேஸ்புக் பல விதமான விதிகளை பின்பற்றி வருகிறது.

இந்த நிலையில் பேஸ்புக்கில் வரும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் எதுவும் பெண்களுக்கு காட்டப்படுவது இல்லை என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதவாது மெக்கானிக், வீடு கட்டும்பணி உள்ளிட்ட வேலை தொடங்கி சில கணினி சார்ந்த பணிகள் குறித்த வேலை வாய்ப்பு விளம்பரங்கள் கூட பெண்களுக்கு காட்டப்படுவது இல்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.

அமெரிக்காவின் ஓஹையோவை சேர்ந்த 3 பெண்கள் இதை கண்டுபிடித்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் பேஸ்புக்கிற்கு எதிராக இதனால் வழக்கு தொடுத்துள்ளார். இதனால் இன்னும் சிலர் பேஸ்புக் மீது வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து