Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

அசான்சோல் : உங்கள் காலை உடைத்து, ஊன்றுகோலை என்னால் கொடுக்க முடியும் என்று மாற்றுத் திறனாளிகளுக்கென நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தின் அசான்சோல் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் பிற உபகரணங்களும் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மத்திய பா.ஜ.க. அமைச்சர் பாபுல் சுப்ரியோ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த பாபுல் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்த ஒருவரைக் கண்டு கோபமடைந்தார்.

அப்போது பேசிய அவர், ஏன் நடந்துகொண்டே இருக்கிறீர்கள்? தயவு செய்து உட்காருங்கள் என்றார். மீண்டும் நகர்ந்த அவரைப் பார்த்து, என்ன ஆயிற்று உங்களுக்கு, ஏதாவது பிரச்சினையா? உங்களின் ஒருகாலை உடைத்து ஊன்றுகோலைத் தர முடியும் என்றார். பின்பு தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேசிய அவர்,

அந்த மனிதர் தன்னுடைய இடத்தில் இருந்து நகர்ந்தால், அவரின் காலை உடைத்து ஊன்றுகோலைக் கொடுங்கள் என்றார். மீண்டும் பேசிய பாபுல், அந்த மனிதருக்காக பார்வையாளர்கள் அனைவரும் கை தட்டுங்கள் என்றார். இதைத் தொடர்ந்து பார்வையாளர்களின் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மத்திய அமைச்சர் பாபுல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து