முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 4-ம் தேதி குருபெயர்ச்சி விழா: குருவித்துறையில் சிறப்பு பூஜைகள்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை : வரும் 4-ம் தேதி குரு பெயர்ச்சியையொட்டி குருவித் துறையில் திருமஞ்சன சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

வரும் 4-ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. ஒருவரது ஜாதகத்தில் குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும் என்று சொல்வதுண்டு. குரு பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் குரு பகவான் வீற்றிருக்கும் தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள குருவித்துறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் வீற்றிருக்கும் அருள்மிகு சித்திரரத வல்லப பெருமாள் திருக்கோவிலில் அமைந்துள்ள சுயம்புவாக வீற்றிருக்கும் குருபகவான் சன்னதியில் குரு பெயர்ச்சி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருவை தரிசனம் செய்வர்.

குரு பெயர்ச்சியையொட்டி வரும் 4-ம் தேதி வியாழக்கிழமை இரவு 10.05 மணியளவில் குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி குருவித்துறையில் குருபகவானுக்கு 2-ம் தேதி காலை 10.35 மணிக்கு மேல் தொடங்கி மறுநாள் 3-ம் தேதி இரவு 8.00 மணி வரை லட்சார்ச்சனை பூஜை நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியை  முன்னிட்டு 4-ம் தேதி இரவு 8.00 மணிக்கு தொடங்கி இரவு 10.05 மணிக்குள் பரிஹார மஹாயாகம், மஹாபூர்ணஹூதி மற்றும் திருமஞ்சன சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மஹா ஆரத்தி நடைபெறும். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அர்ச்சனை நடைபெறும். மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாகும். குரு பெயர்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ஜெயதேவி, செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து