முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் துறை வளர்ச்சிக்கு மானியத்துடன் முதலீடும் தேவை: அருண் ஜெட்லி பேச்சு

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : வேளாண் துறை வளர்ச்சிக்கு மானியம் வழங்குவதுடன், அத்துறையில் முதலீட்டை அதிகரிப்பதும் மிகவும் அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நவீன யுகத்தில் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு உதவுவது குறித்த புத்தக வெளியீட்டு விழா டெல்லியில்  நடைபெற்றது. இதில் புத்தகத்தை வெளியிட்டு ஜெட்லி பேசியதாவது:

வேளாண்மைத் துறையின் மேம்பாட்டுக்கு மானியங்கள் மட்டும் போதாது; அத்துறையில் முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் தன்னிறைவு பெற்று வாழ முடியும். முதலீட்டுக்கான வளங்களை முறையாகத் திரட்டுவதுதான், ஒரு சிறப்பான பொருளாதாரத்தை உருவாக்கும்.

அப்போதுதான் நாம் வளர்ச்சியின் பயன்களை நேரடியாக உணர முடியும். இதற்கு, மூலதன உருவாக்கம் என்பது அரசின் கைகளில் மட்டுமல்லாது, பல்வேறு துறைகளிலும் பரவலாக நடைபெற வேண்டும். இந்தியாவில் வேளாண்மைத் துறைக்கு கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது. மானியம் வழங்குவதுடன் நின்றுவிடாமல், முதலீட்டையும் அதிகரிக்கும்போதுதான் வேளாண் துறை மேன்மையடையும். மானியத்தை மட்டுமே வழங்கிக் கொண்டிருப்பது ஏற்புடையதாக இருக்காது. முதலீடுகள்தான் விவசாயிகள் தற்சார்புடன் இருப்பதை உறுதி செய்யும். விவசாயிகள் முழு பொருளாதார பலத்துடன் செயல்படும்போதுதான் இந்திய வேளாண் துறையும் சிறப்பான கட்டத்தை எட்டும்.

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக மேம்பட்டு வருகிறது. இப்போதும், உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டின் வளர்ச்சி மேம்பட்ட நிலையில் உள்ளது. நாட்டின் பல்வேறு பிராந்தியங்களிலும் வெவ்வேறு வகையான துறைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கியப் பங்களிக்கிறது. நமது நாட்டில் பல்வேறு துறைகளில் வளர்ச்சிக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து