முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தலைமை செயலர் உத்தரவு

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் தலைமை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இது தொடர்பாக தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,

கூடுதல் இயக்குநர்...

தமிழ்நாடு சர்க்கரைத்துறை ஆணையராக ரீடா ஹரீஸ் தாக்குரும் ( சர்க்கரை ஆலை கார்பரேசன் நிர்வாக இயக்குநர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது), வேளாண்துறை கூடுதல் இயக்குநராக விஜயராணியும், நில நிர்வாக இணை ஆணையராக கற்பகமும், ஊரக வளர்ச்சி துறை கூடுதல் செயலராக பிங்கி ஜோயலும், பொது பணித்துறை கூடுதல் செயலராக பாலாஜியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூடுதல் கமிஷனர்...

வணிகவரி இணை ஆணையராக மேகநாதரெட்டியும், சமூக பாதுகாப்பு துறை இயக்குநராக ஜெகன்னாதனும், பொருளாதார மற்றும் புள்ளியில் துறை கமிஷனராக அதுல் ஆனந்தும், சென்னை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் (கல்வி) குமாரவேல் பாண்டியனும், தமிழ்நாடு பாட நூல் இயக்குநராக வெங்கடாசலமும், பிற்படுத்தப்பட்டோர் துறை இயக்குநராக மதிவாணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து