முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடியில் கலெக்டர் தலைமையில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

பரமக்குடி,- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.
 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ரயில் நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தினை முன்னிட்டு, தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றின் சார்பாக ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த மகளிர்; பெருமளவு பங்கேற்ற விழிப்புணர்வு மனித சங்கிலி கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- மத்திய, மாநில அரசுகளின் ஆணைப்படி, கர்ப்பிணிப் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள், வளர் இளம் பெண்கள் மற்றும் 5 வயதிற்குட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேசிய ஊட்டச்சத்து மாதம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.  ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் மரணங்களை முற்றிலுமாக தவிர்த்திடும் வகையில் சத்தான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே  இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்  இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம் மற்றும் 650க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் மனித சங்கிலி மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக மகப்பேறு காலத்தில் ஏற்படும் தாய்,சேய் இறப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.  கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.  கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடானது அவர்களை பாதிப்பதோடு மட்டுமல்லாது பிறக்கும் குழந்தையின் நலத்தினையும் பெரிதும் பாதிக்கும்.
 
 கர்ப்பிணிப் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள், வளர் இளம் பெண்கள் மற்றும் 5 வயதிற்குட்ட குழந்தைகள் இவர்களின் உடல்நிலை மிகவும் முக்கியமானதாகும். பிரசவித்த தாய்மார்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் தங்களது குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வளர்க்க முடியும்.  இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தாய்மார்கள்,கர்ப்பிணிப் பெண்கள், வளர் இளம் பெண்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தங்களின் ஆரோக்கியத்திற்கு என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  இதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இதற்காக கருத்தரங்குகள், மருத்துவ முகாம்கள் மற்றும் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பெண்கள் சத்தான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்வதோடு, தன்சுத்தம் பேணுவதுடன் தங்களுக்கு தெரிந்த தகவல்களை சுற்றத்தாருக்கும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு பேசினார்.
 பின்பு கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சப்-கலெக்டர்  பி.விஷ்ணுசந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.ஹெட்சி லீமா அமாலினி, மாவட்ட மகளிர் திட்ட திட்ட இயக்குநர் கோ.குருநாதன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, உணவுப்பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் மரு.ஜெகதீஸ் சந்திரபோஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, பரமக்குடி வட்டாட்சியர் பரமசிவம், பரமக்குடி நகராட்சி ஆணையாளர் (பொ) வரதராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, சந்திரமோகன் உள்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து