முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங்குக்கு எதிராக போராடி வெற்றி: பந்துவீச்சில் தவறு செய்ததாக கேப்டன் ரோகித் சர்மா ஒப்புதல்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், ஹாங் காங்குக்கு எதிராக பந்துவீசுவதில் தவறு செய்துவிட்டதாக கேப்டன் ரோகித்சர்மா கூறியுள்ளார்.

போராடி வெற்றி

துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஹாங்காங்கிடம் இந்தியா போராடி வெற்றி பெற்றது. இந்தியா நிர்யணித்த 286 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ஹாங் காங் அணியின் தொடக்க ஜோடியான நிஜா கட்கான் (92ரன்), அனத் மான்ராஜ் (73) 34.1 ஓவரில் 174 ரன் சேர்த்தது. அவர்கள் அவுட் ஆன பிறகு விக்கெட்டுகள் சரிந்தன. ஹாங்காங் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்தது. இதன் மூலம் இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எளிதாக இருக்காது

கத்துக்குட்டி அணியா ஹாங் காங்கை இந்திய பந்து வீச்சாளர்கள் எளிதாக சுருட்ட முடியாமல் திணறியதை பார்க்க முடிந்தது. போராடி வென்றது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

ஹாங் காங்குக்கு எதிரான போட்டி எளிதாக இருக்காது என்பதை அறிந்து இருந்தோம். இறுதியில் வெற்றி பெற்றது முக்கியமானது. நாங்கள் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்குகினோம். ஆனால் அதை காரணம் காட்டக்கூடாது. பந்துவீச்சில் தவறு செய்துவிட்டோம். இன்னும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அதை கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் (ஹாங்காங்) வெற்றியை நோக்கி முன்னேறினர். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

தவான் அசத்தல் சதம்

எந்த ஒரு கட்டத்திலும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. கடைசி கட்டத்தில் நெருக்கடி சூழ்நிலையை கையாண்ட விதம் சிறப்பானது. ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் விளையாடி விட்டு இங்குள்ள சூழ்நிலையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அது அவ்வளவு எளிதானதல்ல.

கண்டுபிடிக்க வேண்டும்

அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் நல்ல பங்களிப்பு அளித்தனர். வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது அற்புதமான வீரர். அவர் நல்ல தொடக்கத்தை தரவில்லை. ஆனால் அதன்பின் மீண்டு வந்து சிறப்பாக பந்து வீசினார். முதல் 3 ஓவரில் சிறப்பாக பந்து வீசவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அதிலிருந்து மீண்டு வரும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். அதை கலீல் அகமது செய்தார். இதனால் அவர் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்தடுத்து போட்டிகளில் மோதுவதால் எந்த பிரச்சினையும் இல்லை. அதனால்தான் ஹாங் காங்குக்கு எதிரான போட்டியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து