முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசியக் கோப்பை போட்டி இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது - பாக். கேப்டன் சர்பராஸ் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய் : ஆசியக் கோப்பை தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆசியக் கோப்பை  கிரிக்கெட் போட்டிகள்  துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இலங்கை, ஹாங்காங் அணிகள் தோல்வி காரணமாக வெளியேறியுள்ளன. இதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற உள்ளன. நேற்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியாவுக்கு சாதமாக...

இந்நிலையில், பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அகமது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். நிருபர்களுக்கு பேட்டி  அளித்த அவர் கூறியதாவது:-

‘இந்த தொடருக்காக முதலில் வெளியிடப்பட்ட கால அட்டவணையில், இந்தியா சில போட்டிகளில் அபுதாபியில் விளையாடும் வகையில் இருந்தது. ஆனால், தற்போது அனைத்துப் போட்டிகளும் துபாயில் விளையாடும் வகையில் இந்தியாவுக்கு சாதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. போட்டி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் என்ற அணிகள் எல்லாம் பார்க்கக் கூடாது.

பாக். கிரிக்கெட்...

அட்டவணையை மாற்றியது தொடர்பாக ஆசியக் கிரிக்கெட் சங்கத்தின் தலையீடு அதிகமாக இருந்திருக்கக் கூடும். இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சர்பராஸ் அகமதின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பி.சி.சி.ஐ-யின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,

பி.சி.சி.ஐ. விளக்கம்

‘அபுதாபியில் இருக்கும் ஐயாத் மைதானத்தை விட துபாயில் இருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மிகப் பெரியது. ஏறக்குறைய 30 ஆயிரம் பார்வையாளர்கள் போட்டியை நேரில் கண்டுகளிக்கலாம். அதிகப்படியான ரசிகர்கள் போட்டியை கண்டு மகிழ வேண்டும் என்பதற்காகவே இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து