முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி 'பீல்டிங்' அமைப்பதில் கவனம் செலுத்த பாண்டிங் அறிவுரை

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங்கின்போது வீரர்களை எந்த இடத்தில் நிறுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டுமென ரிக்கி பாண்டிங் அறிவுரை வழங்கியுள்ளார்.

பார்ப்பதில்லை...

இந்திய கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. இப்போட்டி தொடர் குறித்து பேட்டி அளித்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு அறிவுரை கூறி உள்ளார். டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு பந்தையும் நான் பார்ப்பதில்லை. ஆனால் ஆடுகளத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு முக்கியமானது.

முக்கியமானது...

ஏனென்றால் கேப்டன்ஷிப்பில் ஒரு கேப்டனின் பணி 60 சதவீதம் களத்துக்கு வெளியே எப்படி செயல்படுவது என்று திட்டம் வகுப்பதில் இருக்க வேண்டும். 40 ஆடுகளத்தில் செயல்படுவதும் ஆகும். பந்து வீச்சை மாற்றுவதிலும் பீல்டிங்கில் வீரர்களை எந்த இடத்தில் நிறுத்துவது என்பது மிகவும் முக்கியமானது. இதில் கோலி கவனம் செலுத்த வேண்டும். மேலும் அவர் ஆடுகளத்துக்கு வெளியே வீரர்கள் தயார்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து