முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரையூர்,டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் ரூ.6கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டங்களுக்கான பூமிபூஜை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார்:

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் ரூ.6கோடி மதிப்பீட்டில் புதிதாக சிமெண்ட் பேவர்பிளாக் சாலைகள் அமைத்திடும் வளர்ச்சித் திட்டங்களுக்கான பூமிபூஜையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் வசித்திடும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட முயற்சியின் பலனாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி பகுதியிலுள்ள 15தெருக்களில் ரூ.3கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கூடிய புதிதான சிமெண்ட் பேவர்பிளாக் சாலைகள் அமைத்தல் மற்றும் பேரையூர் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் ரூ.3கோடி செலவில் பேவர்பிளாக் சாலைகள் அமைப்பதுடன் பேரையூர் பைபாஸ் சாலையில் புதிய தார்ச்சாலை,தடுப்புச்சுவருடன் வடிகால் கட்டிட திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து பேரையூர்,டி.கல்லுப்பட்டி ஆகிய இரு பேரூராட்சிகளிலும் ரூ.6கோடி மதிப்பீட்டிலான பணிகளின் தொடக்கவிழா பூமிபூஜையுடன் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் முனைவர்.நடராஜன் தலைமை வகித்தார்.ஏராளமாக பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் ரூ.6கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து திலகமிட்டு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிதாவது: பொது மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி உருவாக்கித் தருவதில் அம்மா அவர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள். அந்த வழியில் தான் முதல்வரும் துணைமுதல்வரும் மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.பேரையூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில்  அம்மாவின் அரசு ரூ.2கோடி செலவில் பைபாஸ் சாலை முழுவதுமாக சீரமைக்கப்பட்டு தார்ச்சாலை அமைக்கிறது.அம்மாவின் அரசு ஏழைகளுக்கான அரசு,சாமானியர்களுக்கான அரசு,தாய்மார்களின் அரசாக திகழ்கிறது.
நிறை பேர் உங்களை வந்து சந்திப்பார்கள்,பல்வேறு ஆதாரமில்லாத கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து விடுவார்கள்.அதற்கு பொதுமக்கள் செவி சாய்த்திட வேண்டாம்.அம்மாவின் அரசு செயல்படுத்திடும் திட்டங்கள் அனைத்தினாலும் ஏழைகளும்,சாமானியர்களும்,தாய்மார்களும் என அனைத்து பிரிவினரும் பயன்பெற்றிடுவார்கள்.இது போன்ற சிறப்பான திட்டங்களினால் இந்தியாவின் இரண்டாவது மாநிலமாக நமது அன்னைத் தமிழகம் விருது பெற்று சாதனை படைத்திருக்கிறது.அதே போல் துறை தோறும் தேசிய விருதுகளை அம்மாவின் அரசு வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது.அம்மாவுடைய அரசின் ஆயுள் காலத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று எத்தனையோ பேர் கனவு கண்டாலும் கூட அந்த கனவு பகல்கனவாகத் தான் போகும்.ஏனென்றால் காவல் தெய்வங்களாக தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்று பேசினார்.
இந்த விழாவில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன்,பேரையூர் வட்டாட்சியர் இளமுருகன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,கள்ளிக்குடி ஒன்றியச் செயலாளர் உலகாணி மகாலிங்கம்,திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் அன்பழகன்,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணைச் சேர்மன் பாவடியான்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன் கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,சுகுமார்,அன்னகொடி,சாமிநாதன்,முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,பாஸ்கரன்,தர்மர்,பழனிச்செல்வி ராமகிருஷ்ணன்,நாகலட்சுமி,மீனாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து