முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை 'சூப்பர் 4' சுற்று: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய் : ஆசிய கோப்பை தொடரில் ‘சூப்பர் 4’ சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.

4 அணிகள் தகுதி

இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் விளையாடும் 6 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘லீக்‘ முதல் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு தகுதி பெறும். ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றன. இலங்கை, ஹாங்காங் அணிகள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன. நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் வங்காள தேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

33 ஆட்டத்தில்...

‘சூப்பர் 4’ சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது. இதில் விளையாடும் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் ஒன்றோடு ஒன்று ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ‘சூப்பர் 4’ சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 33 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா 27-ல், வங்காளதேசம் 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடியவில்லை.

பாகிஸ்தானுடன்...

இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 23-ம் தேதி மீண்டும் சந்திக்கிறது. கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் 25-ம் தேதி, மோதுகிறது. ‘சூப்பர் 4’ சுற்று முடிவில் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் இந்தப் போட்டித் தொடரில் 3-வது முறையாக மோதும் நிலை ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து