முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய் : ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான பந்துவீச்சு முறை மிகவும் சிறப்பாக இருந்தது என்று கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் நேற்று மாலை நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் 162 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக இருந்தது

பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

ஹாங் காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள நாங்கள் விரும்பினோம். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. பந்துவீச்சு முறை மிகவும் சிறப்பாக இருந்தது. ஆடுகளம் பந்துவீச்சு ஏற்ற வகையில் இல்லாவிட்டாலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்கள் பணியை செய்தனர்.

ஆலோசித்தோம்...

ஹாங் காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து மேம்பட்டு விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு விளையாடினோம். பாபர் ஆசம்- சோயிப் மாலிக் ஜோடியின் ஆட்டம் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். ஆனால் நாங்கள் அச்சம் அடையவில்லை. கேதர் ஜாதவின் பந்துவீச்சு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. எங்களது பேட்டிங்கும் நன்றாக இருந்தது. அம்பதி ராயுடுவும், தினேஷ் கார்த்திக்கும் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து