முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திறந்தவெளி சிறையாகிறது எகிப்து மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

கெய்ரோ,விமர்சகர்களுக்கான திறந்தவெளிச் சிறையாக எகிப்து மாறி வருகிறது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் குற்றம்சாட்டியிருக்கிறது .

அமைதியான முறையில் தங்கள் கருத்துகளை வெளியிடும் மக்களைச் சிறையில் அடைப்பதைக் கைவிட வேண்டும் என்றும், பேச்சு சுதந்திரத்தை நசுக்கும் வகையிலான சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் எகிப்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. எகிப்து அதிபர் அப்துல் பட்டா எல் சிசியை விமர்சித்ததாகக் கடந்த டிசம்பர் முதல் இதுவரை 111 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. எகிப்தின் சமகால வரலாற்றில் இந்த அளவுக்கு அடக்குமுறை இருந்ததில்லை என்று அந்த அமைப்பின் வடக்கு ஆப்பிரிக்கப் பிரிவின் இயக்குநர் நஜியா பவுனிம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து