முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடிய விஷமுள்ள ஜந்துக்கள் மத்தியில் வாழ்ந்து வரும் தாத்தா

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

பாரீஸ்,ஒரு பக்கம் பாம்புகள், மற்றொரு பக்கம் ஆமை, சுற்றிலும் எக்கச்சக்கமான கொடிய விஷமுள்ள விலங்குகள் என 67 வயசு தாத்தா ஒருவர் வாழ்ந்து வருகிறார் பிரான்சில். லூரே என்ற நதிக்கரையில் உள்ள கிராமத்தில்தான் இந்த தாத்தா வாழ்ந்து வருகிறார். இவரது பெயர் பிலிப் கில்லட். இவருக்கு மிருகங்கள் என்றால் அவ்வளவு பிடிக்குமாம்.

இரண்டு முதலை, ராட்சச ஆமை, நல்ல பாம்பு, பயங்கரமான விஷம் உடைய கட்டுவிரியன் உள்ளிட்டவற்றை வீட்டிற்குள் வைத்துள்ளார். இப்படி மொத்தம் 400 கொடிய விஷமுள்ள ஜந்துக்கள் இந்த தாத்தாவிடம் வளர்ந்து வருகின்றன. இவைகளுடன் ஒரு கூட்டு குடித்தனம் நடத்தி கொண்டு, அவற்றிடம் கொஞ்சிக் கொண்டும் நாட்களை கடத்தி வருகிறார்.

விலங்குகளை எப்படி அன்பாக நடத்த வேண்டும், இயற்கையோடு இணைந்து நாம் எப்படி வாழ வேண்டும் பிரான்ஸ் மக்களுக்கு சொல்லி கொடுக்கிறாராம். அந்த தாத்தாவிற்கு விலங்குகளின் காதலன் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாத்தாவின் வாழ்க்கை குறித்து அறிந்த பிரான்ஸ் அரசு விலங்குகளை வளர்க்க அனுமதி கொடுத்துள்ளது. அத்துடன், வெளியூர்களுக்கும் இந்த விலங்குகளை அழைத்து செல்லவும் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து