முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசத்தின் நலனுக்காக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது தொடரும் பிரதமர் மோடி உறுதி

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,இந்திய தேசத்தின் நலனுக்காக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது தொடரும் என்று பிரதமர் மோடி டெல்லியில் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நான்கு ஆண்டு ஆட்சியை முடித்து விட்டு தற்போது 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்குள்ளாகவே அடுத்த தேர்தலுக்கான ஏற்பாடுகளிலும் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மைய திறப்பிற்கு அடிக்கல் நாட்டினார். இதில் வர்த்தகம் குறித்தும், முதலீடு குறித்தும் சந்தேகங்களை தீர்க்கும் கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்தியா முழுக்க பல தொழில் முனைவோர்களுக்கு இதன் மூலம் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மேலும் பேசிய பிரதமர் மோடி, இந்திய தேசத்தின் நலனுக்காக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது தொடரும். மக்களின் நலனுக்காக எதையும் செய்ய தாயாராக இருக்கிறோம். எந்த ஒரு கடினமான முடிவையும் மேற்கொள்வதற்கு பா.ஜ.க. அரசு தயங்கவே தயங்காது. மக்கள்தான் எங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த கண்காட்சி மையம் பெரிய அளவில் அமையும். இது சர்வதேச தரத்தில் இருக்கும். இதனால் இந்தியா வேகமாக வளரும். 2022-ம் ஆண்டுக்குள், இந்திய பொருளாதாரம் பெரிய வளர்ச்சி அடையும். இந்திய பொருளாதாரம் அப்போது 5 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். முன்னதாக பிரதமர் மோடி இந்த விழாவிற்கு மெட்ரோ ரயிலில் சென்றார். இது பெரிய வரவேற்பை பெற்றது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து