முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றழுத்தத்தால் காது, மூக்கில் ரத்தம் ரூ. 30 லட்சம் நஷ்ட ஈடு கேட்கும் விமான பயணி

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை,மும்பையில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று முன்தினம் காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் வானில் பறக்க தொடங்கிய சிறிது நேரத்தில் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வானில் விமானம் பறக்கும் போது விமானத்துக்குள் காற்றழுத்தத்தை  சீராக வைத்திருப்பதற்கான இரு பொத்தான்களை பைலட்டுகள் இயக்காமல் விட்டதே பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட காரணம்  என்று தெரியவந்தது.

அடுத்த சில நிமிடங்களில் சுமார் 30 பயணிகளின் காது, மூக்கில் இருந்து ரத்தம்  கொட்டியது. உடனே அவர்களுக்கு விமான பணிப்பெண்கள் மாஸ்க் கொடுத்தனர். என்றாலும் பெரும்பாலான பயணிகள் தலைவலி, ரத்த கசிவால் துடித்தனர். இதையடுத்து அந்த விமானம் மீண்டும் மும்பை திரும்பி வந்தது. பயணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். ரத்த கசிவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

5 பயணிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்துக்கு விமான பயணம் செய்ய கூடாது என்று டாக்டர்கள் அவர்களிடம் அறிவுறுத்தி டிஸ்சார்ஜ் செய்தனர். இந்த நிலையில் அதிக ரத்த இழப்பை சந்தித்த பயணி கலா, ஜெட் ஏர்வேஸ் மீது கடும் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த விமானத்துக்குள் என்ன நடந்தது என்பது பற்றி விசாரிக்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து