முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா இணைந்து நடிக்கும் கள்ளபார்ட் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன்துவங்கியது.

விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தை தயாரித்த மூவிங் பிரேம் நிறுவனம் அடுத்ததாக அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் `கள்ளபார்ட்' படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. `என்னமோ நடக்குது', `அச்சமின்றி' படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். படத்தில் இடம்பெறும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது.

தொடர்ந்து முப்பது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. நடைபெற்ற படத்தின் பூஜையில் பா.ரங்கநாதன் எம்.எல்.ஏ, தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் விஜய் சந்தர், ஜெயபிரகாஷ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குட்டிபத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து