முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயன்படாத பொருட்களால் இரண்டு சக்கர வாகனங்கள் தயாரித்து காந்திகிராம பல்கலைகழக மாணவர்கள் சாதனை

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

  திண்டுக்கல், - காந்திகிராம கிராமிய பல்கலைக் கழக மாணவர்கள் பயன்படாது என ஒதுக்கப்பட்ட பொருட்களை வைத்து 4 இரண்டு சக்கர வாகனங்களை தயாரித்து உள்ளனர். தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்குபெற்று முதல் இரண்டு பரிசுகளை பெற்றது.
   திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் தொழில் கல்வி திட்டத்தின் கீழ் யமஹா நிறுவனத்துடன் இணைந்து இரண்டு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் ஒர் ஆண்டு பட்டய படிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ஆண்டுக்கு 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பயிற்சியில் சேர்ந்த ஒரு மாணவி உள்பட 50 மாணவர்கள் தனித்தனி குழுவாக இணைந்து பயன்பாடாது என ஒதுக்கப்பட்ட பழைய உதிரி பாகங்களை கொண்டு 4 இரண்டு சக்கர வாகனங்களை தயாரித்தனர்-. இதில் இரண்டு வாகனங்கள் பேட்டரியால் இயங்க கூடியவை. 2 பெட்ரோலால் இயங்க கூடியவை.
  இவர்கள் தயாரித்த வானங்கள் நேற்று முன்தினம் திண்டுக்கல் எஸ்எஸ்எம் கல்லு£ரியில் நடைபெற்ற தேசிய அளவிலான மினி பைக் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டது. வேகமாக ஓட்டுதல், பறந்த படி ஒட்டுதல் என பல்வேறு கட்ட நிகழ்வுகளுக்கு பின்னர் பேட்டரியால் இயங்க கூடிய வாகனம் முதல் பரிசையும், இன்னொரு பேட்டரி வாகனம் இரண்டாம் பரிசையும், பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனம் இரண்டாம் பரிசையும் பெற்றது.
  3 பரிசுகளை பெற்ற மாணவர்களை பல்கலைக் கழக வளாகத்தில் பல்கலைக் கழக துணைவேந்தர் நடராஜன் பாராட்டி பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் துணைவேந்தர் நடராஜன் கூறுகையில், காந்திகிராம பல்கலைக் கழக மாணவர்கள் தொழில்சார்ந்த எந்த தயாரிப்பாக இருந்தாலும் அதற்கு பல்கலைக் கழகம் உறுதுணையாக இருந்து வருகிறது. அதன்அடிப்படையில் இந்த மாணவர்கள் தயாரித்த இந்த 4 வாகனங்களும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டது. 60 சிசி வேக திறன் முதல் 80 சிசி வேக திறன் கொண்டது.  முழுக்க முழுக்க எதற்கும் பயன்படாது என ஒதுக்கப்பட்ட உதிரி பாகங்களை கொண்டு இந்த வாகனங்களை தயாரித்து உள்ளனர்.
  பேட்டரியால் இயங்கும் 2 வாகனங்கள் சூழலை மாசுப்படுத்தாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும், 4 வாகனங்களையும் எவ்வளவு நேரம் ஒட்டினாலும் முதுகு வலி வராத வகையில் அமைத்து உள்ளனர். பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் இந்த வாகனங்கள் ஒருமுறை சார்ஜ் போட்டால் 60 கிலோ மீட்டர் வரை 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். இந்த வாகனம் தயாரிக்க ரூ. 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவாகும்.
  மாணவர்கள் தயாரித்த இந்த வாகனம் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு என 3 பரிசுகளை இந்த மாணவர்கள் பெற்று வந்துள்ளனர். வரும் காலங்களில் மாணவர்கள் தயாரிக்கும் இதுபோன்ற இரண்டு சக்கர வாகனங்கள் சந்தை படுத்துவதற்கு பெரிய நிறுவனங்களுடன் தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படும். இவ்வாறு துணைவேந்தர் கூறினார்,
  பேட்டியின் போது துறை தலைவர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து