முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஷ்கோடியில் ராட்சத கடல் அலை: சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை.

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேஸ்வரம்- தனுஸ்கோடி  கடல் பகுதியில் பலத்த  சூறைக்காற்று வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரைகள் அரிச்சல்முனை கடல் பகுதி வரை செல்ல போலீஸார் இரண்டாவது நாளாக நேற்றும் தடைவிதித்துள்ளனர்.

   வங்க கடலில்  ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டல நிலை உருவாகியுள்ளது.இதனால் தென்கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.இதனைதொடர்ந்து ராமேசுவரம்,பாம்பன் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும்  மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.அதுபோல  ராமேஸ்வரம் தனுஸ்கோடி பகுதியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் எழும்பி நீர் கரைக்கு வந்து செல்கிறது.   இதனால் அரிச்சல் முனைப்பகுதிக்கு செல்ல வரும் சுற்றுலா பயணிகள் தனுஸ்கோடி பகுதியுடன் போலீஸார்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பலத்த காற்று காரணமாக முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனைப்பகுதி வரை மணல் புயல் போல் வீசுவதால் சாலைகளில் இரண்டு சக்கர வாகனங்களிலும் பொதுமக்களும் நடத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.    இந்நிலையில் அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் இராமேஸ்வரம் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இரும்பு பலகைகள் அனைத்தும் கடலில் முழ்கியுள்ளது அத்துடன் கடல் நீர் சாலை வரை வந்து செல்வதால் சுற்றுலா பயணிகள் அனைவரையும் மெரைன் போலீஸார்கள் மற்றும் தனுஸ்கோடி காவல் துறை போலீஸார் கடலில் இறங்கவிடாமல் தடுத்து முழு  கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாம்பன் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் இரயில் அனைத்தும் குறைந்த வேகத்தில்; இயக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து