முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடியில் காக்காத் தோப்பு பகுதி குப்பைகளுக்கு இடையே ஆதிகாலத்து 8 சுவாமி சிலைகள்

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

பரமக்குடி - பரமக்குடி நகரின் கிழக்குப் பகுதி காக்காத் தோப்பு குப்பைகளுக்கு இடையே சுவாமி சிலைகள் கிடப்பதாக அப்பகுதியில் சென்ற மக்கள் கண்டு வருவாய்த் துறை மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
 இதைத் தொடர்ந்து பரமக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர்                  சதீஷ்குமார், துணை தாசில்தார் வரதன், வேந்தோணி குரூப் கிராம நிர்வாக அலுவலர்கள் ரெத்தினேஸ்வரர், ஈசுவரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிலைகளை கைப்பற்றினர்.
 அங்கு ஆதிகாலத்து பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி தாயார், விஷ்ணுதுர்கை, சரஸ்வதி,பிரம்மன்,இரண்டு அம்மன் சிலைகள் ஆகியவை 2 அடி முதல் 4 அடி உயர கல் சிலைகளாகும். இச் சிலைகள் எங்கு இருந்தவை?, எதற்காக குப்பைகளுக்கு இடையே போடப் பட்டுள்ளன? என்பன குறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் பரமக்குடியில் கல்லால் ஆன சுவாமி சிலைகள் கண்டெடுக்கப் பட்டது பரமக்குடி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து