முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      சினிமா
Image Unavailable

பிரபல இயக்குனர் பி.வாசு, எம்.ஜி.ஆரை வைத்து அதிக பொருட் செலவில் தயாராகும் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு ஒரு படமாகவும் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு அனிமே‌ஷன் படமாக ஒரு படமும் உருவாகி வருகிறது. என் பேஸ் என்ற அதிநவீன தொழில் நுட்பம் மூலம் எம்.ஜி.ஆரை உயிரோடு திரையில் நடமாட வைக்கப்போகிறார்கள். சுமார் 172 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

சர்வதேச தயாரிப்பான இத்திரைப்படம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, மற்றும் அமெரிக்காவிலும் படமாக்கப்பட இருக்கிறது.இந்த படத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் ஆரஞ்ச் கவுண்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ மார்கழி பழனி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி விமலாநாதன் இருவரும் படம் பற்றி கூறும்போது, ‘இயக்குனர் வாசுவின் தந்தை எம்.ஜி.ஆரின் ஒப்பனை கலைஞராக பணியாற்றிய காரணத்தால், எம்.ஜி.ஆரின் மிக நுண்ணிய அசைவுகள், நடத்தைகள், முகபாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இருந்து, கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பும், வாசுவிற்கு இயல்பாகவே அமைந்தது. அதனாலேயே இத்திரைப்படத்தை இயக்குவதற்கு சரியான தேர்வாக அவரை கருதுகிறோம். வாசு ஒரு திறமையான இயக்குனர் என்பதால் இத்திரைபடத்திற்கும் தேவையான தனிச்சிறப்புடைய பங்களிப்பை அவர் தருவார். இந்த படத்துக்காக எம்.ஜி.ஆர். குறித்து உருவாக்கியுள்ள டிஜிட்டல் உருவகங்களைக் கொண்டே, வருங்காலத்தில் திரைப்படங்களோ அல்லது விளம்பர படங்களோ உருவாக்க முடியும் என்பதால், இந்த முயற்சி முன்னுரிமை பெறுகிறது’ என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து