முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளதாவது,

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றின் திசை மாறுபாட்டின் காரணமாகவும் வெப்பச் சலனத்தாலும் உள் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கிராமத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து