முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா வேடத்தில் நடிகை நித்யாமேனன் டைரக்டர் பிரியதர்ஷினி பேட்டி

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க டைரக்டர் பிரியதர்ஷினி முன்வந்துள்ளார். இந்த படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். தி அயர்ன் லேடி என்ற பெயரில் உருவாகும்.

இந்த படம் பற்றி இயக்குனர் பிரியதர்ஷினி கூறியதாவது:சிறுவயது முதலே நான் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர். அவரது துணிச்சலான, உறுதியான குணாதிசயம் மிகவும் பிடிக்கும். நான் முதன் முதலாக அவருக்குத்தான் வாக்களித்தேன். அவரை நீண்ட காலமாக கவனித்து வந்தேன். அவரை பற்றிய செய்திகள், புத்தகங்கள் எதையுமே விட்டு வைத்ததில்லை. என்னுடைய தந்தையும் அவரது அபிமானிதான். ஒரு பெண்ணாக சினிமா இயக்கத்தில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். என்னுடைய இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு உருவாவதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி.

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க புகழ் பெற்ற நடிகையாக இருப்பது மட்டுமே தகுதி ஆகாது. நன்றாக நடிக்க தெரிந்த நடிகை ஒருவர் தேவைப்பட்டார். அதோடு ஜெயலலிதாவின் உயரமும், உடல்வாகும் பொருந்த வேண்டும். அப்படி தேர்வானவர் தான் நித்யாமேனன். அவர் என் மனதில் தோன்றியதுமே பெங்களூருக்கு சென்று அவரை சந்தித்து கதையை விவரித்தேன். அவருக்கு கதை மிகவும் பிடித்து போகவே சம்மதித்தார். இந்த படம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை முழுமையாக பேசும். அவரது மரணம் மர்மமாக இருக்கிறது. அதையும் சேர்த்தே இந்த படம் பிரதிபலிக்கும். அவரது சினிமா வாழ்க்கையை அப்படியே காட்டுவதற்காக அவர் நடித்த காலத்தில் இருந்த சினிமா ஸ்டூடியோக்களை செட் போட்டு பிரம்மாண்டமாக எடுக்க இருக்கிறோம். முதலில் கறுப்பு, வெள்ளையில் தொடங்கி பின் கலருக்கு செல்லலாம் என்று திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து