முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகுவது அவசியம் - ராகுல் டிராவிட் பேட்டி

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

செப் : இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது அவசியம் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-4 என இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றால், மிகவும் சிறப்பான முறையில் தயாராகுவது அவசியமானது என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

சுலப்பாக இல்லை

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘இங்கிலாந்து கண்டிசன் பேட்டிங் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்காது. இரண்டு அணி பேட்ஸ்மேன்களும் திணறியதாக நான் நினைக்கிறேன். விராட் கோலியை நீக்கிவிட்டு நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்த தொடர் முழுவதும் பேட்ஸ்மேன்களுக்கு ஈசியாக இருக்கவில்லை.

மிகவும் அரிதானது

நான் இங்கிலாந்தில் விளையாடியுள்ளேன். கண்டிசன் சற்று கடினமான இருக்கலாம். ஆனால், ஐந்து ஆட்டங்களிலும் கண்டிசன் கடினமாகவே இருப்பது மிகவும் அரிதானது. இதுபோன்ற கண்டிசனுக்கு நாம் மிகவும் சிறப்பான வகையில் தயாராக வேண்டும். நாம் முயற்றி செய்து, கண்டிசனுக்கு ஏற்ற வகையில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு விளையாடுவது தேவையானது. இது கடினமானதுதான். எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து