முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பொதுச் செயலர் அக்.1-ல் இந்தியா வருகை

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்,ஐ.நா. பொதுச் செயலர் அண்டோனியோ குட்டெரெஸ், வரும் 1-ம் தேதி இந்தியா வருகிறார்.ஐ.நா. பொதுச் செயலராக அவர் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாளை இந்தியா கொண்டாடும் வேளையில், அவரது பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பயணம் குறித்து, அவரது செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹேக், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-வரும் 1-ம் தேதி, இந்தியா வரும் அண்டோனியோ குட்டெரெஸ், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஐ.நா. ஹவுஸ் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 2-ம் தேதி, மகாத்மா காந்தி சர்வதேச சுகாதாரத் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், 3-ம் தேதி, பல்வேறு நிகழ்வுகளில் அண்டோனியோ குட்டெரெஸ் கலந்து கொள்கிறார். அன்றைய தினம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஹேபிடேட் சென்டரில் சர்வதேச சவால்கள், சர்வதேச தீர்வுகள் என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்து அவர் உரையாற்றுகிறார். அதன் பிறகு, சர்வதேச சூரியமின்சக்தி நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு செல்கிறார். 4-ம் தேதி, அவர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நியூயார்க் திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து