முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா - ஹாங்காங் இடையே அதிவேக ரயில் பாதை திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

ஹாங்காங்,ஹாங்காங்குக்கும், சீனாவுக்கும் இடையிலான அதிவேக ரயில்பாதை  திறக்கப்பட்டது.ஹாங்காங் நகருக்கும், சினாவின் தொழில் உற்பத்தி மையமான குவாங்டாங் மாகாணத்துக்கும் இடையிலான அதிவேக ரயில்பாதை  திறக்கப்பட்டது. 1,000 கோடி டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை வழியாக தினமும் 80,000 -க்கும் மேற்பட்டவர்களை அழைத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஹாங்காங் மற்றும் ஷென்ஷென் நகரங்களுக்கிடையே பயணிக்க ஒரு மணி நேரம் தேவைப்பட்ட நிலையில், இந்த புதிய அதிவேக ரயில்பாதை மூலம் 14 நிமிடங்களில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு சென்று விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.எட்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட இந்தப் பாதை, 26 கி.மீ. நீளம் கொண்டது ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து