முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம்கள்:அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.- திருமங்கலம் நகரில் 18வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கென பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம்களை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் செப்டம்பர் 23ம் தேதியான நேற்று   புதியவாக்காளர் சேர்த்தல்,பெயரை நீக்குதல்,திருத்தம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்திட தமிழகம் முழுவதிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரின் பள்ளிகளில்  உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேற்று இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று நடத்தப்பட்ட இந்த வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் ஏராளமானோர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கென விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுத்தனர்.அதே போல் திருத்தம் செய்திட வேண்டியும்,நீக்கம் செய்திட வேண்டியும் ஏராளமானோர் வாக்குச்சாவடிகளில் இதற்கென நியமிக்கப்பட்டிருந்த அலுவலர்களிடம் தங்களது மனுக்களை கொடுத்தார்கள். இந்நிலையில் நேற்று மதியம் திருமங்கலம் நகரிலுள்ள பி.கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது வாக்காளர் சேர்ப்பு மையங்களில் உள்ள அலுவலர்களிடமும்,வாக்காளர்களுக்கு உதவிடும் பணியிலிருந்த அ.தி.மு.க நிர்வாகிகளிடமும் வாக்காளர்கள் சேர்க்கை விபரங்கள் மற்றும் திருத்தப்படுவதற்காக நீக்கப்படுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள மனுக்களின் விபரங்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில்: இன்றைக்கு தமிழகம் முழுவதிலும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல்,நீக்கல்,திருத்தம் போன்ற பணிகளுக்காக   அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த முகாம்களுக்கு வருவோர்களுக்கு   உதவிகள் செய்திடுமாறு அ.தி.மு.க.வினருக்கு முதல்வரும் துணை முதல்வரும் ஆணையிட்டுள்ளனர்.புதிய வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உதவிகரமாக இருந்து  வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வந்து தகுந்த ஆதாரங்களுடன் அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்களில் பங்கேற்க ஆணையிட்டதன் அடிப்படையில் நமது மதுரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்  இன்றைக்கு நடைபெறுகின்ற  முகாம்களில் புதிய வாக்களர்கள் சேர்த்தல்,அதே போல் இடம்மாறிச் சென்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் வாக்குகளை நீக்கிடும் பணிக்கு கிராம நிர்வாக அலுவலரின் அத்தாட்சி பெற்று அதனை இங்கே சமர்ப்பித்திடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாடிகளிலும் வாக்காளர்களுக்கு உதவிகள் செய்திட கழகத் தொண்டர்கள்  பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர்.
அப்போது மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,திருமங்கலம் நகர் அவைத் தலைவர் ஐ.ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவஜோதிதர்மர் கட்சி நிர்வாகிகள் சிவனாண்டி,வாசிமலை,சிவக்குமார்,ஆனந்த்,சாமிநாதன்,கோடீஸ்வரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து