முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணம் இருப்பவர்கள் எல்லாம் பதவியில் அமர முடியாது மக்களுக்காக உழைப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும் தினகரனுக்கு சாட்டையடி கொடுத்த அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- கொள்ளை அடித்த பணத்தை வைத்து பதவியை பிடித்து விடலாம் என தினகரன் நினைக்கிறார். பணம் இருப்பவர்கள் எல்லாம் பதவியில் அமர முடியாது மக்களுக்காக உழைப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும் என தினகரனுக்கு சாட்டையடி கொடுத்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.
திண்டு;க்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 110வது பிறந்தநாள் விழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துரோகம் இழைக்கப்பட்டதைக் கண்டித்தும் ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட கழக செயலாளரும் திண்டுக்கல் மாநகராட்சி முதல் மேயருமான வி.மருதராஜ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் வாரியத் தலைவருமான பி.பாலசுப்பிரமணி அனைவரையும் வரவேற்றார். நகர கழக செயலாளர் உதயம் ஏ.ராமசாமி. தொப்பம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் கிட்டுச்சாமி முன்னிலை வகித்தனர். கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக அமைப்பு செயலாளரும் மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக அமைப்பு செயலாளரும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.விசுவநாதன், கழக செய்தி தொடர்பாளரும் கலை இலக்கிய பிரிவு தலைவருமான லியாகத் அலிகான், மாவட்ட கழக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.உதயகுமார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி பரமசிவம், தலைமைக் கழக பேச்சாளர்கள் எம்.கோபி காளிதாஸ், நடிகர்
ஏ.கே.ராஜேந்திரன். என். முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பேசினர்.
கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றுகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நம்மை ஆளாக்கிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை மாநிலம் முழுவதும் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நாகர்கோவிலில் நடைபெற்றது. வருகிற 30ம் தேதி கடைசியாக சென்னையில் விழா எடுக்கிறார்கள். புரட்சி தலைவரின் புகழை முதல்வரும், துணை முதல்வரும் பரப்பி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தானும் கூட்டம் நடத்துகிறேன் என தினகரன் மேலூரில் கூட்டம் நடத்தினார். அதற்கு பிறகு ஏதாவது கூட்டம் நடத்துவார் என்று பார்த்தால் மன்னார்குடியில் கூட்டம் நடத்தினார். அதில் தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும். அதுபோல் 50 ஆயிரம் அடி தாண்டுவேன், 60 ஆயிரம் அடி தாண்டுவேன் என தன்னைத் தானே உயர்த்தி பேசி உள்ளார். 2001ல் நான் நினைத்திருந்தால் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராக ஆகி இருப்பேன் எனவும் கூறி உள்ளார். எனது வீட்டில் டிரைவர் உள்ளார். வேலை ஆட்கள் உள்ளனர். பல நண்பர்கள் உள்ளனர். அத்தனை பேரும் எனது சொத்துக்கோ அல்லது எனது உடமைக்கோ உரிமை கோரினால் எவ்வளவு கேவலமோ அதைவிட கேவலமாக அங்கே பாதுகாப்புக்காக அல்லது வேறு உதவிகளுக்காக சென்ற அந்த குடும்பத்தை சேர்ந்த தினகரன் இன்று எங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை இருக்கிறது முதல் அமைச்சர் பதவியை நாங்கள் ஏற்றிருப்போம். நாங்களாகவே விட்டுக் கொடுத்துள்ளோம். என்று பேசி உள்ளார். இது கேப்பையிலே நெய் வடிகிறது என்றால் அதை கேட்பவர்களுக்கு எங்கே போனது எங்கே போனது புத்தி?
மாநிலம் முழுவதும் வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்து ஆட்களை திரட்டி தினகரன் ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடத்தினார். ஆனால் இன்று கழகம் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மட்டுமே தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.  இங்குள்ள வணிக பெருமக்கள், தாய்மார்கள் இன்று நடைபெறுகின்ற கூட்டம் எழுச்சி போல அவர்கள் கூட்டத்தில் இருந்ததா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஜெயிலுக்கு போனேன் ஜெயிலுக்கு போனேன் என்று நடிகர் வடிவேலு போல கூறி வருகிறார். எதற்காக நீங்கள் ஜெயிலுக்கு போனீர்கள்? காபிபோசா சட்டத்தில் கைது செய்து சிறை சென்ற குற்றவாளி தானே தினகரன். ஆனால் அவர் மகாத்மா காந்தியின் உத்தம பேரன் போல் கழக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக கூறி வருகிறார். அன்றைய தினம் லண்டன் வழக்கில் கருணாநிதியிடம் பிச்சை எடுத்து அவரை மட்டும் விடுவித்து அம்மாவை பொய் வழக்கில் காட்டி கொடுத்த துரோகி தான் தினகரன். அவரை நம்பி சென்ற நமது நண்பர்கள் மீண்டும் நமது கழகத்தில் இணைய வேண்டும். 
அம்மாவை கொலை செய்தவர்கள் தான் இன்று ஆட்சியை கைப்பற்ற துடிக்கின்றனர். தினகரன். திவாகரன். பாஸ்கரன் என அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் கொள்ளை அடித்த பணத்தை வைத்து பதவியை பிடித்து விடலாம் என நினைக்கின்றனர்.  பணம் இருப்பவர்கள் தான் முதல் அமைச்சராக, பிரதமராக, ஜனாதிபதியாக வர முடியும் என்றால் டி.வி.எஸ் ஐயங்கார். டாடா பிர்லா, அம்பானி ஆகியோர் தான் பதவியில் இருந்திருக்க வேண்டும். பணம் இருப்பவர்களால் மட்டுமே பதவிக்கு வந்து விட முடியாது. மக்களுக்காக உழைப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும். அவ்வாறு உழைத்ததால் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 3 முறையும். அம்மா 6 முறையும் முதல்வராக பதவி வகித்தனர். 37 எம்.பிக்களையும் அம்மா பெற்று தந்தார்.
வரவிருக்கின்ற திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் மறைந்த போஸ் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் வெற்றி பெறும். திருவாரூரிலும் கழகமே மகத்தான வெற்றி பெறும். இவ்வெற்றிக்கு பிறகு தினகரன் கட்சியில் உள்ள தம்பிமார்கள் நமது கழகத்தில் வந்து இணைய வேண்டும். புரட்சி தலைவி அம்மாவின் கனவை நிறைவேற்றுவோம்.
மு.க.ஸ்டாலின் நமது ஆட்சியில் ஊழல் நடந்து வருவதாக ஊடகங்களில் கூறி வருகிறார். நமது அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் அவருக்கு தெளிவாக பதில் அளித்துள்ளனர். வழக்கு போடுங்கள். அதனை சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்று பெறுவோம். நாங்கள் குற்றவாளி என்றால் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். 2016ம் ஆண்டில் ஸ்டாலின் பேண்ட் சர்ட் போட்டு பிரச்சாரம் செய்தார். ஆனால் அம்மா தான் மகத்தான வெற்றியை பெற்றார். கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கொடுக்க வில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளை மெரீனாவில் அடக்கம் செய்வதற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட போது அவர் முன்னாள் முதல்வர்களுக்கு இடம் கிடையாது என கூறியதை ஸ்டாலினிடம் தெரிவித்தோம்.மெரீனாவில் அடக்கம் செய்வது தொடர்பாக வழக்கும் உள்ளது. எனவும் தெரிவித்தோம். ஒரே நாளில் அவர்கள் போட்ட வழக்கை வாபஸ் பெற வைத்தவர்கள் தான் நம்முடைய முதல்வரும். துணை முதல்வரும். அ.தி.மு.கழகத்தை அழிக்க பார்த்த கருணாநிதியாலேயே முடியவில்லை. அவரது மகன் ஸ்டாலினால் தானா முடியப் போகிறது.?  
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மிக சிறப்பான முறையில் ஆட்சி புரிந்து வருகின்றனர். காவிரி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் அம்மாவின் வழியில் கையாண்டு மகத்தான வெற்றியை பெற்று தந்துள்ளனர். கழகத்தையோ ஆட்சியையோ எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. அம்மா வழியில் நடைபெறும் கழக ஆட்சிக்கு தமிழக மக்கள் என்றென்றும் துணை நிற்க வேண்டும் என்று பேசினார். 
கூட்டத்தில் நத்தம் தொகுதி முன்னாள் செயலாளர் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் குப்புசாமி, ஏ.டி.செல்லசாமி, கே.எஸ்.என்.வேணுகோபாலு, தென்னம்பட்டி பழனிசாமி, பிரேம்குமார். சுப்புரத்தினம், ஒன்றிய கழக செயலாளர்கள் ஆத்தூர் பி.கே.டி நடராஜன், ரெட்டியார்சத்திரம் ராஜ்மோகன், நத்தம் ஷாஜகான். சாணார்பட்டி ராமராசு, பழனி முத்துசாமி, குஜிலியம்பாறை மலர்வண்ணன், வடமதுரை லட்சுமணன், நிலக்கோட்டை யாகப்பன், வத்தலக்குண்டு பாண்டியன். திண்டுக்கல் ஜெயசீலன், கொடைக்கானல் மேல்மலை முருகன், நகர செயலாளர்கள் கொடைக்கானல் ஸ்ரீதர். பழனி முருகானந்தம், சார்பு அணி நிர்வாகிகள் திவான்பாட்சா, பாரதிமுருகன், ஜெயபாலன், வி.டி.ராஜன், வளர்மதி, அன்வர்தீன், ஜெயராமன், அகரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல். வத்தலக்குண்டு பீர் முகமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து