முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

ரியாத்,சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த  நிலையில், விஷன் 2030 என்ற பெயரில் சவுதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில் அந்நாட்டு அரசு அதிகப்படியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாலை நேரங்களில் ஆண் வாசிப்பாளருடன் சேர்ந்து செய்திகளை வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் வீம் அல் தஹீல் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சவுதி அரேபியாவில் வாகனங்கள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி மற்றும்  திரையரங்குகள் உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பெண் செய்தி வாசிப்பாளர் நியமனமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து