முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுக்கு தயார்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ,காஷ்மீர் பிரச்னை குறித்து அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மத்திய மண்டல கவுன்சிலின் கூட்டம் ராஜ்நாத் சிங் தலைமையில்  நடைபெற்றது. உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற அக்கூட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சாலை வசதிகளை மேம்படுத்துதல், மாவோயிஸ்டு தீவிரவாதத்தை ஒடுக்குதல், காவல்துறையை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்நாத் சிங்கிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அவற்றுக்கு அவர் அளித்த பதில்:ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹொலாந்த் முதலில் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர், அவை குறித்து அவரே சில விளக்கங்களைத் அளித்துள்ளார். அதாவது, இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தை அந்த ஒப்பந்தத்தில் இணைத்தது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட பிரான்ஸ் விமான தயாரிப்பு நிறுவனமே விளக்கமளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் ரபேல் ஒப்பந்தத்தில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை என்பது தெளிவாகிறது. வேண்டுமென்றே இதை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி சந்தேகங்களை எழுப்புவது தேர்தல் ஆதாயத்துக்காகத்தானே தவிர அதில் வேறு எந்த நோக்கமும் இல்லை.
காஷ்மீர் பிரச்னைகளை எடுத்துக் கொண்டால், அவற்றுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதுதொடர்பாக அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து