முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் துப்பாக்கிச்சண்டை:பயங்கரவாதி சுட்டுக் கொலை

வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் -பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

பயங்கரவாதி பலி...ஜம்மு காஷ்மீரில் மூன்று இடங்களில் பாதுகாப்பு படையினர் -பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டைகளில், ஒரு ராணுவ வீரர், பொதுமக்களில் ஒருவரும் பலியாகியுள்ளனர். பயங்கரவாதி ஒருவனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். ஸ்ரீநகரில் இருந்து 58 கி.மீட்டர் தொலைவில் உள்ள அனந்தநாக் பகுதியில்  பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இணையசேவை நிறுத்தம்.....இதையடுத்து சுதாரித்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், பாதுகாப்பு படையினர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். பயங்கரவாதிகள் தரப்பில் ஒருவனும் சுட்டுக்கொல்லப்பட்டான். அதேபோல், பட்காம் மாவட்டத்தில் ஒரு பகுதியில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இரண்டு பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  என்கவுண்டரையடுத்து அப்பகுதியில், இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து