முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 28 செப்டம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

புது டெல்லி,கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

அனுமதிக்க கோரி வழக்கு...கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதியில்லை. பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். அதில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. பாலின சமத்துவத்துக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீர்ப்பு ஒத்தி வைப்பு.....இந்த வழக்கில் தங்கள் பதிலைத் தெரிவித்த கேரள இடதுசாரி அரசு, பருவம் எய்திய பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கிறோம் என்று கடந்த ஜூலை 18-ம் தேதி மனுத்தாக்கல் செய்தது. அதே சமயம் முன்பு கேரளாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

பாகுபாடு காட்ட கூடாது...இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. சுப்ரீ்ம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில்,  சபரிமலை கோவிலில் நீண்ட காலமாகவே பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள். வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக் கூடாது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் கட்டாயமாக அனுமதிக்க வேண்டும். கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது சட்டவிரோதம்.கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது சுதந்திரம், மரியாதை, பாலின சமநிலைக்கு எதிரானது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.

மாறுபட்ட தீர்ப்பளித்த பெண் நீதிபதி...தீபக் மிஸ்ராவுடன் கன்வில்கர் இணைந்து அளித்த தீர்ப்பை ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அறிவித்தனர். ஆனால் இந்த அமர்வில் இருக்கும் ஒரே பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். எனினும் ஐந்து நீதிபதிகளில் 4 பேரும் ஒரே கருத்தை கொண்டு இருப்பதால் அந்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து