'மரண வெயிட்டிங்: விஜய் தேவரகொண்டா

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      சினிமா
nota

Source: provided

மரண வெயிட்டிங்கில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.  ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கீதா கோவிந்தம்’ தெலுங்குப் படங்களின் மூலம் புகழ் பெற்றவர் விஜய் தேவரகொண்டா.

இவர் தமிழில் அறிமுகமாகும் படம் ‘நோட்டா’. ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் ‘நோட்டா’ படத்தில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக மெஹ்ரீன் நடிக்கிறார். யாஷிகா ஆனந்த் நாசர், சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், வருகிற அக்டோபர் 5-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் தேவரகொண்டா, “முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில், அதைக் கவனிக்காமல், ‘எண்ணித் துணிக கருமம்’ என்ற திருக்குறளை திரும்பத் திரும்ப மனப்பாடம் பண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால், இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன். இயக்குநர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது.

இந்தப் படம் குறித்து ட்விட்டரில் அடிக்கடி ‘மரண வெயிட்டிங்’ என கமெண்ட் போடப்பட்டு இருந்தது. அதேபோல் நானும் இந்தப் படத்திற்காக மரண வெயிட்டிங். இந்தப் படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்றார்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து