முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக நடைபெற்று வருகிறது சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலர் இராதாகிருஷ்ணன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை-மதுரை மாவட்டம், மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற பல்நோக்கு அரசு மருத்துவமனை கட்டடத்தினையும், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பகுதி, முடநீக்கியியல் வெளிநோயாளிகள் பகுதி மற்றும் அரசு இராசாசி மருத்துவமனை அனைத்து பகுதிகளுக்கும் சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன்  , மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன்,  ஆகியோர்  நேரடியாக சென்று  திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

 ஆய்வின் போது சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலர்   தெரிவிக்கையில்:

 தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை மாநகரத்தில் பொதுமக்களின் நலவாழ்வுக்காக தமிழக அரசின் தீவிர முயற்சியின் காரணமாக மத்திய அரசின் நிதியுதவியுடன் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவக் கட்டடம் கட்டப்பட்டு முடியும் நிலையில் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இப்புதிய பல்நோக்கு மருத்துவ கட்டடத்தில் முதல் கட்டமாக 6 வெளிநோயாளிகள் பகுதிகள் அக்டோபர் இரண்டாம் வாரத்திற்குள் முழுமையாக முடியும் நிலையில் உள்ளது. இப்புதிய மருத்துவ கட்டடமானது அரசு இராசாசி மருத்துவமனையினுடைய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பகுதி, முடநீக்கியியல், நரம்பியியல், ஆகிய பகுதிகளுக்குரிய கட்டடத்திற்கு எதிரில் உள்ளதால் நோயுற்ற பொதுமக்கள் விரைந்து குணமடைவதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கவுள்ளது. இப்புதிய மருத்துவமனைக்கான மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், நிர்வாக அலுவலர்கள் விரைந்து நியமிப்பதற்கான நடவடிக்கை தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 மேலும் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, ஏற்கனவே சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  200 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கு முன்பாக மண் பரிசோதனையும் முடிக்கப்பட்டு, மத்திய அரசு கேட்டுள்ள 5 விதமான நிபந்தனைகளையும் நிறைவேற்றுகின்ற வகையில் தமிழக அரசால் நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மத்திய அரசிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

 தமிழ்நாடு முதலமைச்சர்   ஆலோசனையின் பேரில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துகின்ற வகையில் மாண்புமிகு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர்  , சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலராகிய நானும் விரைவில் மத்திய அரசின் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர்  நேரடியாக சந்தித்து பணிகளை விரைவாக தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ள இருக்கின்றோம் என தெரிவித்தார்.  

   ஆய்வில் மருத்துவ கண்காணிப்பாளர் மரு.சண்முகசுந்தரம் , திட்ட ஒருங்கிணைப்பாளர் மரு.ஸ்ரீசரவணன்  , சுகாதாரத்துறை துணை இயக்குநர்;கள் மரு.செந்தில்குமார் , மரு.அர்ஜுன்குமார்   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து