முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் சமூக ஆர்வலர்கள் தான் சபரிமலைக்கு வருவார்கள் தேவஸ்தான தலைவர் தகவல்

திங்கட்கிழமை, 1 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண் சமூக ஆர்வலர்கள் மட்டுமே வருவார்கள் என திரு வாங்கூர் தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார்.கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை, திருவாங்கூர் தேவஸ் தான தலைவர் ஏ.பத்மகுமார் நேற்று சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் கூறியதாவது, சபரி மலை ஐயப்பன் கோயிலில் பெண் களை அனுமதிக்கக் கோரும் வழக்கில், பாலின சமத்துவம் மற்றும் அரசியல் சாசன சட்டப் படியான அடிப்படை உரிமை ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வருத்தமளிக்கிறது. ஆனால் கோயில் அமைந்துள்ள நில அமைப்பு, சூழ்நிலை ஆகிய வற்றை கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

அதேநேரம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், சில பெண் சமூக ஆர்வலர்கள் மட்டுமே கோயிலுக்கு வரு வார்கள். உண்மையான பெண் பக்தர்கள், சபரிமலை கோயிலின் பாரம்பரியம், நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பார்கள். எனினும் கோயி லுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். தீர்ப்பை அமல்படுத்துவதற்காக 100 ஏக்கர் நிலம் ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து