முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் இல்லா மதுரை மாநகர் விழிப்புணர்வு பேரணி

திங்கட்கிழமை, 1 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை- மதுரை மாநகராட்சியின் சார்பில் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் இல்லா மதுரை மாநகர் விழிப்புணர்வு பேரணியை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்  எஸ்.நடராஜன்,  கொடியசைத்து துவக்கி வைத்தார். 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தப்படி 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சியின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அரசு மீனாட்சி மகளிர் கல்லூரியை சார்ந்த 250 மாணவிகள், லேடி டோக் கல்லூரியை சார்ந்த 250 மாணவிகள், மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியை சார்ந்த 250 மாணவ, மாணவிகள், வக்புவாரிய கல்லூரியை சார்ந்த 200 மாணவர்கள் என சுமார் 1000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் இல்லா மதுரை மாநகர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுப்பது குறித்தும் பிளாஸ்டிக் மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பேரணியில்  மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து பல்வேறு தகவல்கள் அடங்கிய பதாகைகள், பேனர்களுடன் பங்கேற்றனர். பேரணியின்போது ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகள் வைத்துள்ள பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்   வழங்கினார். இந்;த விழிப்புணர்வு பேரணி மதுரை தமுக்கம் மைதானம்; முதல் கோரிப்பாளையம், அரசு இராசாசி மருத்துவமனை, பனகல் சாலை, அண்ணா பேருந்து நிலையம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.
இறுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுப்பது குறித்த பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்த பேரணியில் உதவி ஆட்சியர் (பயிற்சி)  ரவீன் குமார்,  கல்வி அலுவலர் (பொ)  .ராஜேந்திரன், செ உட்பட கல்லூரி ஆசிரியர்கள், காவல் துறையினர், கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து