முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோஷ்டி மோதல் வாகனங்களுக்கு தீ வைப்பு 40 வீடுகள் சேதம் 50 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2018      விருதுநகர்
Image Unavailable

 அருப்புக்கோட்டை -  அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரை கிராமத்தில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினர் இடையே கோஷ்டி மோதல் வாகனங்களுக்கு தீ வைப்பு கற்கல், சோடா பாட்டில் வீச்சு 5பேர் காயம், 40 வீடுகள் சேதம், 50 பேர் கைது பதட்டம் போலீஸ் குவிப்பு
 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே தெப்பலாக்கரை கிராமத்தில் உள்ள இறைஞ்சி முத்தம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது சம்பந்தமாக கடந்த 10 மாதங்களாக இரு தரப்பினரிடையே பிரச்சணை இருந்து வருகிறது.  வருவாய் கோட்டச்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரும் தனி தனியே சாமி கும்பிட உத்திரவிட்டார்.  இந்நிலையில் நேற்று புரட்டாசி மாத பொங்கல் விழா கோவிலுக்கு வந்த போது மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் முற்றி கலவரமாக மாறியது.  அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்கள், சோடா பட்டில்கள் வீசி தாக்கி கொண்டனர். இதில் 5பேர் படுகாயம் அடைந்தனர். 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன பின்னர் இரு சக்கர வாகனம் ஆட்டோ வய்க்கோல் படத்திற்கும் தீ வைத்தனர்.  கலவரத்தை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கலவரம் சம்பந்தமாக இரு தரப்பிலும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்தும், 40க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை பறிமதல் செய்துள்ளனர்.  கலவரம் காரணமாக தொப்பலாக்கரை போலீஸார் குவிக்கப்பட்டு பதட்டமான நிலை இருந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து