முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்கையா நாயுடு திண்டுக்கல் வருகையை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. சக்திவேல் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- இந்திய துணை ஜனாதிபதி திண்டுக்கல் வருகை தருவதை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. சக்திவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் வரும் 10ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு 1200 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற 65 மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களையும் வழங்குகிறார். மேலும் காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், கஸ்தூரிபாய் மருத்துவமனை டாக்டர் கவுசல்யாதேவி ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவையில் இருந்து தனி விமானம் மூலம் அம்பாத்துரை ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் காந்திகிராம பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அதனையடுத்து மதிய உணவுக்குப் பின் 3.30 மணியளவில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். விழா முடிந்ததும் மதுரைக்கு செல்லும் வெங்கையா நாயுடு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
இதனை முன்னிட்டு விழா நடைபெறும் இடம், அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. சக்திவேல் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் நடராஜன், பதிவாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து