முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தியின் 150 - வது பிறந்த நாளையொட்டி மதுரை மேலமாசி வீதி கதர்விற்பனை நிலையத்தில் உள்ள உருவசிலைக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்தார்

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை,- மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி மதுரை மேலமாசி வீதியில் கதர் விற்பனை நிலையத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தேசதந்தை மகாத்மா காந்தி மதுரைக்கு வருகை தந்த போது அங்குள்ள குடிமக்களை பார்த்து அவர்கள் அணிந்திருந்த துணிகளை போல் தானும் இனி அணியப்போவதாக கூறி தான் அணிந்திருந்த ஆங்கிலேய ஆடைகளை அகற்றி கதர் ஆடை அணிந்த இடத்தில் கதர் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.  இங்கு அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 2 - ம் தேதியன்று  கதர்விற்பனைத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இணைந்து நடத்தும் விழாவில் மாவட்ட  கலெக்டர்  தலைமையில், மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 
அதனடிப்படையில் மகாத்மா காந்தியின் 150 - வது பிறந்ததினமான நேற்று மேலமாசி வீதியில் அமைந்துள்ள கதர்விற்பனை நிலையத்தில் உள்ள திருவுருவச்சிலைக்கு மாவட்ட  கலெக்டர் நடராஜன் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  மாலையணிவித்து மரியாதை செலுத்தி, கதர் ஆடைகளின் முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கதர்விற்பனைத்துறை துணை இயக்குநர் அருணாச்சலம், உதவி இயக்குநர் பாரதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சே.ரா.நவீன்பாண்டியன் , உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) வா.பெ.வினோத் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து