முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் டி.டி.வி அணியினர் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்

புதன்கிழமை, 3 அக்டோபர் 2018      தேனி
Image Unavailable

 

 தேனி - தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ரோடு ஆட்டோ சங்க தலைவர் பி.வி.கணேசன், துணைத்தலைவர் கருப்பசாமி, செயலாளர் மொக்கைப்பாண்டி, துணை செயலாளர் சசிக்குமார், பொருளாளர் கண்ணன், துணை பொருளாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 28 பேர் தங்களை கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கழக துண்டுகளை அணிவித்தார். தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டவர்கள் கூறும்போது டி.டி.வி அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லாததாலும், தாய் கழகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் கழகத்தை சிறப்பாக வழிநடத்தி வருவதாலும் தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டதாக தெரிவித்தனர். இவ்விழாவில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், போடி நகர கழக செயலாளர் வி.ஆர்.பழனிராஜ், நகர அவைத்தலைவர் காந்தி, நகர மாணவரணி செயலாளர் சேஸ்.கே.ராஜவேல் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து